MARC காட்சி

Back
கொற்கை வெற்றிவேல் அம்மன்-கண்ணகி கோயில்
245 : _ _ |a கொற்கை வெற்றிவேல் அம்மன்-கண்ணகி கோயில் -
246 : _ _ |a கண்ணகி கோயில்
520 : _ _ |a பண்டையத் தமிழகத்தில் பாண்டியர்களின் தலைநகராக விளங்கிய கொற்கையில் ‘வெற்றிவேல் அம்மன்’ என்ற பெயரில் கண்ணகிக்கு கோயில் எடுப்பிக்கப்பட்டு வழிபாட்டில் உள்ளது. வெற்றிவேல் அம்மன் தற்போது நாட்டுப்புற தெய்வமாக விளங்குகிறது. வெற்றிவேற்செழியன் என்னும் பாண்டிய மன்னன் பத்தினி வழிபாட்டை முன்னிறுத்தி கண்ணகிக்கு கொற்கையில் கோயில் எடுப்பித்தான். இக்கோயில் புனரமைப்பு நிலையில் இக்கால கட்டிடப்பாணியில் திகழ்கிறது.
653 : _ _ |a கோயில், தமிழகம், தமிழ்நாடு, தமிழகக் கோயில்கள், தமிழ்நாட்டுக் கோயில்கள், ஆலயங்கள், அம்மன் கோயில்கள், கண்ணகி கோயில், பத்தினி வழிபாடு, கண்ணகி வழிபாடு, பெண் தெய்வம், கொற்கை, பொற்கை, வெற்றிவேல் செழியன், பாண்டியன், வெற்றிவேற்செழியன், வெற்றிவேல் அம்மன், பாண்டிய நாடு, தூத்துக்குடி மாவட்டக் கோயில்கள், ஸ்ரீவைகுண்டம் வட்டாரக் கோயில்கள்
700 : _ _ |a க.த.காந்திராஜன்
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
905 : _ _ |a கி.பி.12-ஆம் நூற்றாண்டு / பாண்டியர்
909 : _ _ |a 3
910 : _ _ |a 1000 ஆண்டுகள் பழமையானது.
914 : _ _ |a 8.6445027017163
915 : _ _ |a 78.063760682696
918 : _ _ |a கண்ணகி
922 : _ _ |a வேப்பமரம்
923 : _ _ |a தாமிரபரணி
925 : _ _ |a ஒருகால பூசை
926 : _ _ |a சித்ரா பௌர்ணமி
927 : _ _ |a இல்லை
928 : _ _ |a இல்லை
929 : _ _ |a கருவறையில் கண்ணகி அம்மன் சிற்பம் அமைந்துள்ளது. கருவறையின் முன்னுள்ள மண்பத்தில் மகிஷாசுரமர்த்தினி, பைரவர், பேய்ச்சியம்மன் ஆகிய சிற்பங்கள் வழிபாட்டில் உள்ளன. பரந்த வெளிப்புறத்தில் விநாயகருக்கு தனியே சிறு கோயில் அமைந்துள்ளது. அக்கோயில் கருவறையில் விநாயகர் அமர்ந்த நிலையில் காணப்படுகிறார். கண்ணகி கோயிலின் முன்னே அனுமன், பெண் தெய்வம் ஆகிய உதிரிச் சிற்பங்கள் காணப்படுகின்றன.
930 : _ _ |a மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் கண்ணகிக்கு வழங்கிய தீர்ப்பால் உயிர் மாய்கிறான். கண்ணகியும் உயிர் துறக்க, பத்தினித் தெங்வத்திற்கு வழிபாடு நிகழ்த்த எண்ணிய சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குச் சிலை எடுக்க இமயம் சென்று, கல்லெடுத்து கனகவிசயர் தலைமேல் ஏற்றிக்கொண்டு மீள்கிறான். வழியில் கங்கையின் தென்கரையில், குமரித்துறை படிந்து கங்கை ஆடச் சென்ற மாடலமறையோனைச் சந்திக்கின்றான். அவன் கொற்கைக்கோமான் வெற்றிவேற் செழியன் கண்ணகிக்கு விழா எடுத்த செய்தியைக் கூறுகிறான். “கொற்கையில் இரந்த வெற்றிவேற் செழியன் பொன்தொழில் கொல்லர் ஈரைந் நூற்றுவர் ஒருமுலை குறைத்த திருமா பத்தினிக்கு ஒருபகல் எல்லை உயிர்ப்பலி ஊட்டி” இவ்விலக்கியச் சான்றால் கொற்கையில் வெற்றிவேற் செழியன் கண்ணகிக்கு விழா எடுத்த பிறகே செங்குட்டுவன் வஞ்சியில் கண்ணகிக்குச் சிலை வடித்து விழா எடுத்தான் என்பது பெறப்படுகிறது. கொற்கையில் வெற்றிவேற் செழியன் கண்ணகிக்கு விழா எடுத்தப் பின்னர்தான் மதுரைக்குச் சென்று அரசாட்சியை ஏற்றார் என்பதும் “ஒருபகல் எல்லை உயிர்ப்பலி ஊட்டி உரைசெல வெறுத்த மதுரை மூதூர் அரைசு கெடுத்து அலம்வரும் அல்லற்காலைத் தென்புல மருங்கின் தீதுதீர் சிறப்பின் மன்மதைக் காக்கும் முறைமுதற் கட்டிலின் நிறைமணிப் புரவி ஓர் ஏழ்பூண்ட ஒரு தனி ஆழிக் கடவுள் தேர்மிசை காலைச் செங்கதிர்க் கடவுள் ஏறினான் என மாலைத் திங்கள் வழியோன் ஏறினான்” என்ற சிலப்பதிகாரத் தொடர்களால் அறியப்படுகிறது. கொற்கையில் வெற்றிவேல் செழியனால் விழா எடுக்கப்பட்ட கண்ணகி வழிபாடே வெற்றிவேல் அம்மன் வழிபாடாக, நாட்டுப்புற தெய்வ வழிபாடாக இன்றும் கொற்கை மாநகரில் நடைபெற்று வருகிறது. இடப்புறத்தில் தலையைச் சாய்த்திருக்கும் அம்மனின் சிலைக்கு ஊர்மக்கள் கூறுகின்ற காரணமும் வழிவழியாக கண்ணகி வழிபாடு கொற்கையில் இருந்து வந்த வரலாற்றுச் சுவட்டைக் காட்டுவதாகவே உள்ளது.
932 : _ _ |a இக்கோயில் சிறிய நவீன பாணி கட்டிடக்கலையைப் பெற்று விளங்குகிறது. கருவறையும், மகாமண்டபமும் பெற்றுள்ளது. கருவறை கருங்கல்லினால் ஆனது. மண்டபம் தற்கால அமைப்பாகும். கருவறை விமானத்தில் சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. வில் வண்டி வடிவ விமான வடிவமைப்பை பெற்று விளங்குகிறது.
933 : _ _ |a இந்து சமய அறநிலையத்துறை
934 : _ _ |a கொற்கை சிவன் கோயில்
935 : _ _ |a தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டத்தில் கொற்கை அமைந்துள்ளது. ஆத்தூரிலிருந்து ஏரல் செல்லும் நெடுஞ்சாலையில் வாழவல்லான் என்ற கிராமத்திற்கு 3 கிலோமீட்டர் கிழக்கிலும் உமரிக்காடு கிராமத்திற்கு நான்கு கிலோமீட்டர் வடக்கிலும் அமைந்துள்ளது.
936 : _ _ |a காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை
937 : _ _ |a கொற்கை
938 : _ _ |a தூத்துக்குடி
939 : _ _ |a மதுரை
940 : _ _ |a ஸ்ரீவைகுண்டம் வட்டார விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_00390
barcode : TVA_TEM_00390
book category : சைவம்
cover images TVA_TEM_00390/TVA_TEM_00390_தூத்துக்குடி_கொற்கை_கண்ணகி-கோயில்-0007.jpg :
Primary File :

TVA_TEM_00390/TVA_TEM_00390_தூத்துக்குடி_கொற்கை_கண்ணகி-கோயில்-0007.jpg

TVA_TEM_00390/TVA_TEM_00390_தூத்துக்குடி_கொற்கை_கண்ணகி-கோயில்-0008.jpg

TVA_TEM_00390/TVA_TEM_00390_தூத்துக்குடி_கொற்கை_கண்ணகி-கோயில்-0009.jpg

TVA_TEM_00390/TVA_TEM_00390_தூத்துக்குடி_கொற்கை_கண்ணகி-கோயில்-0001.jpg

TVA_TEM_00390/TVA_TEM_00390_தூத்துக்குடி_கொற்கை_கண்ணகி-கோயில்-0002.jpg

TVA_TEM_00390/TVA_TEM_00390_தூத்துக்குடி_கொற்கை_கண்ணகி-கோயில்-0003.jpg

TVA_TEM_00390/TVA_TEM_00390_தூத்துக்குடி_கொற்கை_கண்ணகி-கோயில்-0004.jpg

TVA_TEM_00390/TVA_TEM_00390_தூத்துக்குடி_கொற்கை_கண்ணகி-கோயில்-0005.jpg

TVA_TEM_00390/TVA_TEM_00390_தூத்துக்குடி_கொற்கை_கண்ணகி-கோயில்-0006.jpg

TVA_TEM_00390/TVA_TEM_00390_தூத்துக்குடி_கொற்கை_கண்ணகி-கோயில்-0010.jpg

TVA_TEM_00390/TVA_TEM_00390_தூத்துக்குடி_கொற்கை_கண்ணகி-கோயில்-0011.jpg

TVA_TEM_00390/TVA_TEM_00390_தூத்துக்குடி_கொற்கை_கண்ணகி-கோயில்-0012.jpg

TVA_TEM_00390/TVA_TEM_00390_தூத்துக்குடி_கொற்கை_கண்ணகி-கோயில்-0013.jpg

TVA_TEM_00390/TVA_TEM_00390_தூத்துக்குடி_கொற்கை_கண்ணகி-கோயில்-0014.jpg

TVA_TEM_00390/TVA_TEM_00390_தூத்துக்குடி_கொற்கை_கண்ணகி-கோயில்-0015.jpg

TVA_TEM_00390/TVA_TEM_00390_தூத்துக்குடி_கொற்கை_கண்ணகி-கோயில்-0016.jpg

TVA_TEM_00390/TVA_TEM_00390_தூத்துக்குடி_கொற்கை_கண்ணகி-கோயில்-0017.jpg

TVA_TEM_00390/TVA_TEM_00390_தூத்துக்குடி_கொற்கை_கண்ணகி-கோயில்-0018.jpg

TVA_TEM_00390/TVA_TEM_00390_தூத்துக்குடி_கொற்கை_கண்ணகி-கோயில்-0019.jpg